கூந்தல் அடர்த்தியாக கருமையாக வளர உதவும் அற்புத மூலிகை
கரிசலாங்கண்ணி:
இன்றைய காலத்தில் பெரும்பாலோர்க்கு இளம் வயதிலே நரைமுடி ,முடி
உதிர்தல் ,முடி வளர்ச்சியின்மை ஆகியவை அதிகரித்து வருகிறது. இன்றைய தலைமுறையில்
பத்து வயது குழந்தைகளுக்கு கூட முடி நரைத்து காணப்படுகின்றனர் . முடி பிரச்சினை
இன்று அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பொதுவான பிரச்சினையாகவே
மாறிவருகிறது. 'யூமெலனின் ' மற்றும் 'பயோமெலனின்' என்னும் நிறமிகள் தான் நம்முடைய முடியின் கருமை நிறத்துக்கு காரணம்
.இந்த நிறமிகள் உற்பத்தி குறைவதால் கருமையான முடிகள் நரை முடிகளாக
மாறுகின்றன.முதுமை வயதை அடைந்த பின்பு தான் நரை முடி வரும்.ஆனால் தற்போது இளம்
வயதிலே நரைமுடி வர ஆரம்பித்துவிட்டன .
கரிசலாங்கண்ணி ஒரு சிறிய வகை செடி.கரிசலாங்கண்ணி எளிதாக வளரும் தன்மை
உடையது.கரிசலாங்கண்ணியில் வெள்ளைநிற பூக்கள் பூக்கும்.கரிசலாங்கண்ணியின் இலை,பூ
இரண்டுமே மருத்துவபயன் கொண்டது .கரிசலாங்கண்ணி பொதுவாகவே சாலை ஓரங்களில் மற்றும்
தெருவோரங்களில் தானாகவே வளரும் தன்மை உடையது .கரிசலாங்கண்ணி வெள்ளை நிற பூக்கள்
காய்ந்து கருப்பு நிறமாக மாறி அவைகள் தானாகவே கீழே விழுந்து புதிய கரிசலாங்கண்ணி
செடிகள் வளர ஆரம்பிக்கின்றன .முடியின் வளர்ச்சிக்கு இயற்கை கொடுத்த வரப்பிரசாதம்
கரிசலாங்கண்ணி.
வெள்ளை கரிசலாங்கண்ணி தற்போது ஹேர் ஆயில் தயாரிப்பில் பிரபலமடைந்து
வருகிறது.பிரிங்கராஜா ஹேர் ஆயில் என்ற பெயரில் தற்போது விற்பனையாகிறது .கடையில்
விற்கப்படும் பிரிங்கராஜா ஹேர் ஆயில் விலை அதிகம் ஆனால் நீங்களே வீட்டில் குறைந்த
செலவில் தயாரிக்கலாம் .'பயோட்டின் ' என்னும் சத்து குறைதல் ,வேதிப்பொருட்கள் அதிகமாக உள்ள ஷாம்புகளை
பயன்படுத்துதல் ஆகியவையே இளம் வயதிலே நரை முடி ஏற்படுத்த காரணமாகின்றன.கரிசாலை
இல்லாத கூந்தல் தைலம் என்பதே இல்லை .கூந்தல் அல்லது தலைமுடி வளர்ச்சிக்கு
கரிசலாங்கண்ணிச்சாறு கலந்து காய்ச்சிய தைலம் அவசியம்.
முடி வளர்ச்சிக்கு இயற்கை அளித்திருக்கும் அற்புத மூலிகை
கரிசலாங்கண்ணி. கூந்தலை என்றும் இளமையாக நீண்டு வளர வைக்கும் தன்மை கொண்டது
என்பதையே அதன் பெயரான கரிசலாங்கண்ணி (கரிசல் +லாங்+கண்ணி) உணர்த்துகிறது .
கரிசலாங்கண்ணி கீரை வகையை சேர்ந்தது.கையாந்தகரை,வெண்கரிசலை,கரிச்சை ,பிருங்கராஜம்
,கைகேசி ,கரிக்கண்டு ,தேகராஜம் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. கரிசலாங்கண்ணியில் இரண்டு
வகை உண்டு .ஒன்று வெள்ளை கரிசலாங்கண்ணி ,மற்றொன்று மஞ்சள்
கரிசலாங்கண்ணி.கரிசலாங்கண்ணியில் இரும்புசத்து ,வைட்டமின்
எ, தங்கச்சத்து உள்ளது.
கரிசலாங்கண்ணி முடி வளர்ச்சியில் முக்கிய பங்கு
வகிக்கிறது.கரிசலாங்கண்ணி முடி கருமையாக வளர்வதற்கும் அடர்த்தியாக வளர்வதற்கும்
உதவுகிறது . கரிசலாங்கண்ணி முடி உதிர்வை தடுக்கும் தன்மை உடையது .
வெள்ளை கரிசலாங்கண்ணி கீரையை பால் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து
குளித்து வர கூந்தல் உதிர்வது நிற்கும் . கரிசலாங்கண்ணி இலைகளைப் பசைபோல அரைத்து,
அடையாகத் தட்டி வெயிலில்காய வைக்க வேண்டும். இதனை நல்லெண்ணையில்
போட்டு, தலையில் தேய்த்து வந்தால் முடி கருமையாக வளரும்.முடி நரைப்பதை தடுத்து
முடி கருமை நிறத்துடன் வளர பெரிதும் உதவும்.
கையாந்தகரை பயன்படுத்தி கண்களுக்கு போடும் கண்மய்
தயாரிக்கலாம்.கரிசலாங்கண்ணி எண்ணெயை கொண்டு செய்யப்படுகின்ற மசாஜின் காரணமாக
தலையில் ஏற்படும் பாதிப்புகள் குறைக்கலாம்.கரிசலாங்கண்ணி தேனுடன் கலந்து
சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கரிசலாங்கண்ணியில் தங்கச்சத்து
இருப்பதால் உடல் நிறம் தகதகவென்று மாறும்.
கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம் :
கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம் செய்ய
கரிசலாங்கண்ணி கீரையை சாறு எடுத்து தேங்காய் எண்ணெய் வுடன் காய்ச்சி வடிகட்டி
வைத்து தலைக்கு தடவி வர கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.
முடி பிரச்சினை மட்டும் அல்லது உயிர்
பிரச்சினைக்கும் உதவி செய்கிறது கரிசலாங்கண்ணி.கல்லீரல் சுருக்க நோயை குணப்படுத்த
கரிசலாங்கண்ணி உதவும் .ஹெபடைடிஸ் ஏ,பி, மஞ்சள்காமாலையையும் கட்டுப்படுத்த கரிசலாங்கண்ணி உதவும் .
கரிசலாங்கண்ணிச்சாறு குழந்தைகளுக்கு
ஏற்படும் சளித்தொல்லையை சரி செய்ய உதவும்.பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் இரத்த
போக்கு அதிகமாக இருக்கும் போது கரிசலாங்கண்ணியின் இலையை வேகவைத்து குடிக்க
வேண்டும் .மெனோபாஸ் அடைந்த பெண்கள் முடி உதிர்வை தடுக்க கரிசலாங்கண்ணியை உணவில்
சேர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment